TRENDING
வழியில் செல்லும் இளம் பெண்களை குறிவைத்து தாக்கும் வாலிபர். .. பெண்களை பார்த்தால் அப்படி தோணும் என்று சேட்டை செய்யும் இளைஞ்சர்…
பெற்றோர் இறந்து அனாதை ஆகிய நபர் தற்பொழுது காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுவுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் எனுமிடம் அமைந்துள்ளது. அங்கு ஒரு தம்பதியர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் இருவரும் தற்பொழுது இறந்துவிட்டனர். அதனால் அந்த இளைஞ்சர் வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். அவர் அனாதை என்பதினால் அக்கம் பக்கத்தினர் அவரின் நிலையை கண்டு உணவு கொடுத்து உதவினார்.
ஆனால் அந்த இளைஞ்சர் அங்குள்ள சில மாணவர்களின் கெட்ட சகவாசத்தால் சீரழிந்து விட்டார் .மேலும் அந்த பகுதியில் எந்த பெண்ணோ இல்லை மாணவிகளோ சென்றால் அவர்களின் கையை பிடித்து இழுத்து வம்புடன் நடந்து கொள்வது அவரின் பழக்கம் . இதனால் அந்த பகுதி மக்கள் சிலர் காவல் நிலையில் புகார் அளித்தனர். அதனால் அந்த இளைஞ்சனை அவர்கள் அழைத்து அவனின் மனநிலையை கருத்தில் கொண்டு அவனை மிரட்டி விட்டு அனுப்பி உள்ளனர்.
ஆனால் அவன் மீண்டும் அந்த வழியே சென்ற மாணவிகளை பிடித்து வைத்து கொண்டு தகராறு செய்கிறான் .அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கு புகார் தெரிவித்து அவர்கள் அங்கு வந்து அந்த இளைஞ்சரை கைது செய்து காப்பகத்தில் சேர்த்தனர் .
