LATEST NEWS
மகளுக்காக சிறப்பு தோற்றத்தில்….! களமிறங்கும் ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் தெரியுமா….!!!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,விநாயகர், மற்றும்
வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்தப் படத்தை சன் பிக்சர் தயாரித்து வருகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
