LATEST NEWS
சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?…. இப்போ இவங்க தான் பிரபல நடிகை…. இதோ பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகின்றது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரனாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளார்.
அந்த குழந்தை கதாபாத்திரம் வேறு யாருமில்லை அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி 75 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ரவீனா தான். இந்த திரைப்படம் கடந்த நான்காம் தேதி வெளியான நிலையில் இதில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட முன்னாடி நட்சத்திரங்களும் நடித்தனர்.
இப்படத்தில் ஹீரோவின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரவீனா. இவர் பிரபல டப்பிங் கலைஞர். ரவீனா தனது சிறுவயதில் குடும்பத்துடன் நடிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
