LATEST NEWS
முகத்தில் திருமணக்கலை வந்துடுச்சு போல…. மிகவும் அடக்கமான உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சினிமாவில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலக இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. தற்போது பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள பாரம்பரிய வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது திருமண கலை வந்தது போல கீர்த்தி சுரேஷ் மிகவும் அடக்கமான க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
