VIDEOS
“இத சொல்லியே, என்ன விளையாட விடாம பண்ணிட்டாங்க”…. பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி அளித்த முதல் பேட்டி….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது பிக் பாஸ் வீட்டில் பத்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஜனனி பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருந்தேன், சனிக்கிழமை வந்ததும் யாருப்பா கேஸ்-கார் என்று நினைத்தபோது நான் தான் அந்த கேஸ் காரர்-ஆ இருப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்ன பொண்ணு என்று கூறியே விளையாட விடாமல் பண்ணிட்டாங்க.
அதனால் தான் அண்ணா அக்கா என்று கூறாமல் விளையாட ஆரம்பித்தேன். வெளியில் வந்து அண்ணா அக்கா என்று கூப்பிட்டு இருக்கலாம் என்று அவர் பகிர்ந்துள்ளார். எனக்கு பின் பேசியவர்களின் வீடியோவை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் நான் வெளியில் வந்த பிறகு என் நண்பர்கள் அனைவரும் அவங்க எப்படி பேசினார்கள் என்று கூறினார்கள் என்று ஜனனி தெரிவித்துள்ள பேட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
