LATEST NEWS
கலிகாலம்..! “போதை தலைக்கேறியதால் ஆடிய தாண்டவம்” பொது இடத்தில் ரகளை செய்த இளம்பெண்கள்! சமாளிக்க முடியாமல் திணறிய போலீஸ்..!!
அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரு இளம்பெண்கள், போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டிலேயே கடுமையான ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர் ஆவேசமாகத் திட்டித் தீர்த்த இவர்களது வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று குடுமிப்பிடிச் சண்டையாக மாறியது.
சாலையையே ஒரு WWE சண்டை மைதானமாக மாற்றி, இரு பெண்களும் மாறி மாறி அடித்துக் கொண்ட கோரக் காட்சியால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பொதுமக்களும் வழிப்போக்கர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இந்த அதிரடி சம்பவத்தை வேடிக்கை பார்த்தபடி அதிர்ச்சியுடன் நின்றனர்.
https://twitter.com/MandeepRajBhar9/status/2083932755575132280/video/2
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், போதை வெறியில் கட்டுப்பாடின்றிச் செயல்பட்ட அந்த இரு பெண்களையும் மீட்க முடியாமல் திணறிப் போயினர். பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட இவர்களின் இந்த போதை ரகளை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் இச்செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
