கண்ணீர்,,! என்னை ஏன் தெருவுல போட்டுட்டீங்க அம்மா..? கைவிடப்பட்ட நிலையிலும் புன்னகைத்த கைக்குழந்தை… அந்த சிரிப்பை பாருங்களேன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணீர்,,! என்னை ஏன் தெருவுல போட்டுட்டீங்க அம்மா..? கைவிடப்பட்ட நிலையிலும் புன்னகைத்த கைக்குழந்தை… அந்த சிரிப்பை பாருங்களேன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்த சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்றை, பெற்ற தாயும் தந்தையும் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவிக்கவிட்டுச் சென்றுள்ள இரக்கமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டபோது, தன்னை பெற்றவர்களே வீதியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதைக் கூட அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை, சுற்றியிருந்தவர்களைப் பார்த்து வெகுளித்தனமாகப் புன்னகைத்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

பூ போன்ற அந்த அழகான பெண் குழந்தையை வீதியில் போட்டுச் சென்ற பெற்றார்களின் கல்நெஞ்சமான செயலைக் கண்டு அப்பகுதி மக்களும் சமூக வலைதளவாசிகளும் கடும் ஆத்திரத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். ‘பெற்ற தாய்க்கே இல்லாத மனசாட்சியா மற்றவர்களுக்கு வரப்போகிறது?’ எனக் நெட்டிசன்கள் பலரும் தங்களது வேதனையை இணையத்தில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisement

தற்போது அந்தப் பாப்பா பாதுகாப்பாக மீட்கப்பட்டு, உரிய பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரக்கமற்ற பெற்றோரின் பிடியிலிருந்து தப்பிய இந்தச் செல்லக் குழந்தைக்கு, அன்பான பராமரிப்பும் பிரகாசமான நல்லதொரு எதிர்காலமும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரே விருப்பமாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in