LATEST NEWS
“தாலியைக் கழட்டுடி” இவ உன் பொண்டாட்டி இல்லடா.. மணமேடையில் கேட்ட அந்த வார்த்தை… தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆடிப்போன உறவினர்கள்..!!
இன்றைய காலகட்டத்தில் போலித் திருமணங்கள் மூலம் ஆண்களை ஏமாற்றிப் பணத்தையும் நகைகளையும் சுருட்டும் மோசடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு திருமணம், யாருமே எதிர்பார்க்காத அதிரடித் திருப்பத்துடன் முடிவடைந்து அங்கு கூடி இருந்த உறவினர்களை உரைய வைத்துள்ளது.
நாக்பூர் திருமண மண்டபத்தில் கெட்டிமேளச் சத்தம் முழங்கத் திருமணச் சடங்குகள் வெகுவிமர்சையாக நடந்துகொண்டிருந்தன. அப்போது திடீரென மண்டபத்திற்குள் புகுந்த நபர் ஒருவர், மேடையில் மணப்பெண்ணாக அமர்ந்திருந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், தானே அவரின் நிஜக் கணவன் என்றும் ஆதாரங்களுடன் கூறிப் பெரும் பூகம்பத்தைக் கிளப்பினார். அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோதுதான், அந்தப் பெண் பலரையும் திட்டமிட்டு ஏமாற்றி வந்த போலி மணப்பெண் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
தாலி கட்டும் கடைசி நொடியில் நிஜக் கணவன் என்ட்ரி கொடுத்ததால், அந்தப் பெண்ணின் மோசடி வலை அடியோடு சரிந்தது. உடனடியாகத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணையும் அவருக்குப் பின்னால் செயல்பட்ட கூட்டாளிகளையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவசரத்திலும் ஆசையிலும் முறையான பின்னணி விசாரணையின்றித் திருமண முடிவுகளை எடுப்பது எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்த நாக்பூர் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
