“டேய் யாருடா இவன்…கேல்குலேட்டருக்கே டஃப் கொடுக்கும் சுட்டி..! 3 வயது சிறுவனின் அசாத்திய கணிதத் திறமை..! ‘ஜப்பானிய கோடு முறை’யில் அசத்தல்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டேய் யாருடா இவன்…கேல்குலேட்டருக்கே டஃப் கொடுக்கும் சுட்டி..! 3 வயது சிறுவனின் அசாத்திய கணிதத் திறமை..! ‘ஜப்பானிய கோடு முறை’யில் அசத்தல்..!!”

Published

on

சமூக வலைதளங்களில் 3 வயது சிறுவன் ஒருவன் கணிதக் கணக்கை மிக எளிதாகத் தீர்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பெரும்பாலான மாணவர்களுக்குக் கணிதம் என்றாலே பயமும், கடினமான பெருக்கல் கணக்குகளுக்குக் கணிப்பானும் தேவைப்படும் நிலையில், இந்தச் சிறுவன் எந்தவிதக் கருவியும் இன்றி 234× 2 என்ற பெருக்கல் கணக்கைச் சில நொடிகளில் துல்லியமாகச் செய்து அசத்தியுள்ளான். சிறுவனின் தன்னம்பிக்கையும், அவனது தனித்துவமான திறமையும் இணையவாசிகளின் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தக் கணக்கைத் தீர்க்கச் சிறுவன் ‘ஜப்பானிய கோடு முறை’ என்ற சுவாரஸ்யமான நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளான். முதலில் 234 என்ற எண்ணைக் குறிக்க 2, 3, மற்றும் 4 என செங்குத்தான வண்ணக் கோடுகளை வரைகிறான். பின்னர், பெருக்க வேண்டிய 2 என்ற எண்ணைக் குறிக்க அவற்றின் குறுக்கே இரண்டு கிடைமட்டக் கோடுகளை வரைகிறான். இந்தக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளிகளைப் பார்த்து, அந்தச் சந்திப்புகளை வரிசையாக எண்ணி 468 என்ற சரியான விடையை மிக விரைவாகக் கண்டறிகிறான்.

Advertisement

https://www.instagram.com/reel/DXs_yc1kkU_/?utm_source=ig_web_button_share_sheet

கணிதத்தைக் காட்சிப்பூர்வமாகக் கற்றுக்கொடுக்க உதவும் இந்த ஜப்பானிய முறை, குழந்தைகளுக்குக் கணிதத்தின் மீதான பயத்தைப் போக்க மிகச் சிறந்த வழியாகும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘devansh_dalai28’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு, அச்சிறுவனின் கூர்மையான புத்தி கூர்மையையும் கற்கும் திறனையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in