LATEST NEWS
“இது இரண்டு மட்டும் போதும்”…. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் எப்போது மேடையில் பேசும்போது தவறாமல் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்வது வழக்கம். அவ்வகையில் நேற்று வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் தங்கை என்று நான்கு பேர் இருந்தனர். அப்பா தினமும் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் போது இரண்டு சாக்லேட் வாங்கி வருவார். அந்த சாக்லேட்டை தங்கை உடனே சாப்பிட்டு விடுவார். ஆனால் அண்ணன் அதனை பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருப்பார்.
அதையும் தங்கை சற்று நேரத்தில் எடுத்து சாப்பிட்டு விடுவாள். அன்பு என்றால் என்ன என்று ஒருநாள் தங்கை தன்னுடைய அண்ணனிடம் கேட்க, உன்னுடைய சாக்லேட்டை நீ சாப்பிடுற, நான் மறைத்து வைக்கும் சாக்லேட்டையும் எடுத்து சாப்பிடற,நீ எடுத்து சாப்பிடுவேன் தெரிஞ்சும் அதே இடத்தில் டெய்லி உன் அண்ணன் சாக்லேட் வைக்கிறான் இல்ல அதுதான் அன்பு என்று அந்த அண்ணன் கூறினான். அன்பு மட்டுமே இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய மிகப்பெரிய ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய நம்முடைய உறவுகளும் எதற்காக நம்மை விட்டுக் கொடுக்காத நண்பர்களும் இந்த இரண்டு அன்பும் கிடைத்துவிட்டாலே எல்லாம் முடிந்தது என்று விஜய் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி முடித்தார்.
