LATEST NEWS
நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?….. பலரும் பார்க்காத அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தற்போது ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா திருமணத்தின் போது தனது அப்பா மற்றும் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
