LATEST NEWS
பிக்பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்துள்ளீர்களா?…. செம க்யூட்டா இருக்காங்களே…. வைரல் புகைப்படம்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிக் பாஸ் ஜனனி குணசீலன். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இலங்கையை சேர்ந்த இவர் தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.
பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 70 நாட்கள் நன்றாக விளையாடிய இவர் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து வரும் இவர் தற்போது தனது தங்கையை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
