LATEST NEWS
வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்…. விஜய் ரசிகர்கள் ஷாக்…. காரணம் என்ன….????
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட குழு சமீபத்தில் அறிவித்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளன.
இந்தத் திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. முதலில் இந்த திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வாரிசுடு திரைப்படம் தெலுங்கில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனவரி 11ஆம் தேதி தமிழில் வாரிசு திரைப்படம் வெளியாகும் எனவும் ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
