LATEST NEWS
அடடே இவரா?…. விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணையும் பிக்பாஸ் 6 பிரபலம்…. குஷியில் ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது. இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்த படத்தில் அமைகின்றது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இன்னும் சில நாட்களில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க பிக்பாஸ் ஜனனி கமிட்டாகி உள்ளதாக ஒரு புதிய செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜனனி தற்போது தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
