TRENDING
பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர்….. 50 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்?…. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்து நேற்று நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேரும் பைனல் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டனர்.
பிறகு ஷிவின் வெளியேற்றப்பட்ட நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் இவர்களில் யாராவது ஒருவர் தான் வெற்றியாளர்கள் என்று ரசிகர்கள் உறுதி செய்தனர். விக்கிரமனுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர் திருமாவளவன் இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கோப்பையை தட்டி தூக்கினார். அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விக்ரமன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சி ஒரு தவறான உதாரணம் காட்டியுள்ளது, பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இது கருப்பு புள்ளியாக இருக்கும் என்று கமெண்டு செய்து வருகிறார்கள்.
https://twitter.com/vijaytelevision/status/1617216718778306561
