திருமணமாகி 17 வருடங்கள் கழித்து மீண்டும் அப்பாவான நடிகர் பக்ரு…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமாகி 17 வருடங்கள் கழித்து மீண்டும் அப்பாவான நடிகர் பக்ரு…. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கின்னஸ் பக்ரூ. அஜய் குமார் என்று பெயர் இருந்தாலும் இவரை கின்னஸ் பக்ரூ என்று கூறினால் தான் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மலையாளத் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் இவர், ஒரு திரைப்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்ததற்காக மிகவும் உயரம் குறைந்த நடிகர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் அற்புதத் தீவு,காவலன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் பக்ருவின் மகள் தீப்தாவிற்கு 14 வயது ஆகின்றது.

இப்படியான நிலையில் நடிகர் பக்ரு மீண்டும் அப்பாவாகி உள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பாவாகி இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தனது மகளை கையில் ஏந்தி மகிழ்ச்சி அடைந்த பக்ருவின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in