LATEST NEWS
நடிகர் ஷாருக்கானின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. பைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்….!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இவரின் பெயர் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு சினிமாவில் அதிகம் சம்பாதித்து பல தொழில்களையும் நடத்தி வருகின்றார்.
இவர் சினிமா மட்டுமல்லாமல் ஐபிஎல் டீம் ஒன்றை வாங்கி நடத்தி வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்துள்ளது. உலக அளவில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த திரைப்படம் துவண்டு கிடந்த பாலிவுட் திரை உலகை தற்போது மீட்டெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கௌரி கான், மகள் மற்றும் மகன்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
