“பெண் பிள்ளை பெத்ததே நான் செஞ்ச பாவம்..!” தினமும் ரூ.20 சாப்பாடு.. 12 ஆண்டு தியாகம்.. பெற்ற மகள்கள் செய்த காரியத்தால் கதறும் தந்தை.. இணையத்தை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெண் பிள்ளை பெத்ததே நான் செஞ்ச பாவம்..!” தினமும் ரூ.20 சாப்பாடு.. 12 ஆண்டு தியாகம்.. பெற்ற மகள்கள் செய்த காரியத்தால் கதறும் தந்தை.. இணையத்தை உலுக்கும் சோகம்..!!

Published

on

ஒரு தந்தையின் 12 ஆண்டு கால உழைப்பையும் தியாகத்தையும் மதிக்காமல், பெற்றோரைக் கலந்தாலோசிக்காமல் காதல் திருமணம் செய்துகொண்ட மகள்கள், “உங்களுடன் இனி எங்களுக்கு எந்த உறவும் இல்லை” எனக் கூறி கைகழுவிய சோகக் கதை சமூக வலைத்தளங்களில் பலரையும் கலங்கவைத்துள்ளது. ஒரு தொழிற்சாலையில் சீனியர் வெல்டராகப் பணிபுரியும் இந்தத் தந்தை, தனது இரண்டு மகள்களுக்கும் நல்ல கல்வியையும் சிறந்த வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வில்லாமல் உழைத்துள்ளார். பணத்தைச் சேமிப்பதற்காகத் தினசரி வெறும் 20 ரூபாய் உணவை மட்டுமே சாப்பிட்டு, தன் பசியைப் பொறுத்துக் கொண்டு மகள்களின் எதிர்காலத்திற்காகத் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்துள்ளார்.

ஆனால், அந்த இரண்டு மகள்களும் பெற்றோரின் வளர்ப்பையும் பாசத்தையும் மறந்து, தங்களுக்குள் காதல் வயப்பட்டு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரிந்தபோது, தங்களை வளர்த்த தந்தையை மதிக்காமல், அவருக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த மகள்கள் முகத்தில் அடித்தாற்போல் கூறியுள்ளனர். தன் வாழ்நாள் முழுவதையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணித்துவிட்டு, இன்று மகள்களால் கைவிடப்பட்டு மனதளவில் உடைந்து போயிருக்கும் அந்தத் தந்தை, “பெண் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதே ஒரு பாவம், குற்றம்; பிள்ளைகளே இல்லாமல் இருப்பதே மேல்” என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது ஒருவருடைய உரிமை என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கும் பெற்றோரின் தியாகத்தை உணர்ந்து அவர்களுக்குத் தெரிவிப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in