“என் கார் மேல கை வச்ச…!” அண்ணனைத் தடுக்க காரின் முன்னே படுத்த தங்கை..! ஃபார்ச்சூனருக்காக மல்லுக்கட்டிய உடன்பிறப்புகள்..! நொய்டாவில் நடந்த டிராமா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கார் மேல கை வச்ச…!” அண்ணனைத் தடுக்க காரின் முன்னே படுத்த தங்கை..! ஃபார்ச்சூனருக்காக மல்லுக்கட்டிய உடன்பிறப்புகள்..! நொய்டாவில் நடந்த டிராமா..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் யார் என்பதில் உடன்பிறந்த அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நொய்டா செக்டர் 113 காவல் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், காரைக் கொண்டு செல்ல முயன்ற அண்ணனைத் தடுக்க பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் சாலையில் படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இந்த உயர்மட்ட நாடகத்தின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

காசியாபாத்தைச் சேர்ந்த ரஜினி மாலிக் என்பவர், தனது ஃபார்ச்சூனர் காரை அண்ணன் ஜஸ்பீர் மான் எடுத்துச் சென்று திருப்பித் தரவில்லை என்று புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் இந்தக் காரைக் கைப்பற்றி நொய்டா காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. அண்ணன் ஜஸ்பீர், “என் தங்கை ஏற்கனவே இந்தக் காரைரூ.32 லட்சத்திற்கு எனது மைத்துனருக்கு விற்றுவிட்டார், அதற்கான ஆவணங்களும் உள்ளன” எனக் கூறினார். ஆனால், பணப் பரிவர்த்தனை மட்டுமே நடந்ததாகவும் காரை விற்பனை செய்யவில்லை என்றும் தங்கை ரஜினி அதனை மறுத்தார்.

Advertisement

https://www.tv9hindi.com/videos

காவல்துறையிடம் ஆவணங்களைக் காட்டிவிட்டு அண்ணன் காரை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஆத்திரமடைந்த ரஜினி காரின் முன்பகுதியில் தரையில் படுத்து மறித்தார். இதனால் காவல் நிலையத்திற்கு வெளியே நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது. இறுதியாக, காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, இந்த வழக்கு குறித்த மேல் விசாரணைக்காக காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in