LATEST NEWS
திடீரென உயிரிழந்த ரசிகர்…. வெளியூரிலிருந்து திரும்பிய நடிகர் கார்த்தி செய்த செயல்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கார்த்தி கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் வினோத் என்பவர் நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற பொருளாளராக உள்ளார்.
29 வயதான அவர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் கார்த்தி படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்ததால் அப்போது அவரால் வர முடியவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது மறைந்த ரசிகர் வினோத் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு பண உதவியும் கொடுத்து அவர் உதவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தியின் இந்த செயலை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.