CRIME
“யாரோ புகுந்து கொன்னுட்டாங்க..!” மதுபோதையில் தூங்கிய கணவனுக்குக் காத்திருந்த கொடூர முடிவு.. நள்ளிரவில் நாடகமாடிய மனைவி… போலீசாரின் ஒற்றைக் கேள்வியில் உடைந்த மர்மம்..!!
உத்தரப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவரைப் பிரிந்து கோபால் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட காஜல் என்ற பெண், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவர் கோபாலுக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் தம்பதியிடையே தினமும் கடுமையான சண்டைகள் ஏற்பட்டு வந்த நிலையில், காஜல் தனது கள்ளக்காதலைத் தொடர கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 14-15 நள்ளிரவில், கணவர் கோபால் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, காஜல் சமையலறை கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் தனது கணவரைத் தாக்கிக் கொன்றுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். எனினும், போலீசாரின் தீவிர விசாரணையில் காஜல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது உண்மை அம்பலமானது. தற்போது கொடூர மனைவி காஜல் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலன் யோகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
