CRIME
“அடச்சீ..வெறும் ஒரு குடம் தண்ணிருக்காக இப்படியா..?” அண்ணி என்றும் பார்க்காமல் கொழுந்தன் செய்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், வெறும் தண்ணீர் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் அவரது கொழுந்தனால் வீட்டின் உள்ளே புகுந்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர், அந்தப் பெண்ணைக் குச்சியால் இரக்கமின்றி சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்துள்ளார். அதோடு நிற்காமல், ஆத்திரம் அடங்காத அவர், அந்தப் பெண்ணை வீட்டின் திண்ணையிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
திண்ணையிலிருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிறகும், அந்த நபர் அந்தப் பெண்ணை விடாமல் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டுக்காரர் ஒருவர், உடனடியாக அந்த நபரைத் தடுத்துப் பெண்ணை மீட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
