தபால் வாக்குகளில் கெத்து காட்டிய திமுக.. இவிஎம் இயந்திரம் திறந்ததும் எகிறிய தவெக.. தாராபுரத்தில் நடக்கும் மரண மாஸ் அரசியல் ஃபைட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தபால் வாக்குகளில் கெத்து காட்டிய திமுக.. இவிஎம் இயந்திரம் திறந்ததும் எகிறிய தவெக.. தாராபுரத்தில் நடக்கும் மரண மாஸ் அரசியல் ஃபைட்..!!

Published

on

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளின் அதிகாரப்பூர்வ நிலவரத்தைத் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது, இதில் ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் சுகன்யா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக வேட்பாளர் சுகன்யா 350 வாக்குகள் பெற்று தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் பானுமதி 229 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 181 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள், தேர்தல் பணியாளர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செலுத்திய தபால் வாக்குகளில் திமுக கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது இம்முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இருப்பினும், தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தபால் வாக்குகளைத் தாண்டி பொதுமக்களின் வாக்குகள் எண்ணப்பட்ட போது, தவெக வேட்பாளர்கள் அசுர வேகத்தில் வாக்குகளை வாரிக்குவித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தபால் வாக்குகளில் பெற்ற இந்தத் தொடக்கக்கால முன்னிலை, பொது வாக்கு எண்ணிக்கையில் திமுக-விற்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதைப் பிற்பகல் 1 மணி நிலவரம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in