LATEST NEWS
பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த புதிய காதல்…. ராபர்ட் மாஸ்டரின் காதலுக்கு ஒத்த வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த ரச்சிதா…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 100 நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர் யார் என்று தெரிந்துவிடும். இதனிடையே அனைத்து போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டில் வரவழைத்து சண்டையும் அன்பையும் காட்டி வருகிறார் பிக் பாஸ். இந்நிலையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ரட்சிதா பலரிடம் நடந்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதே சமயம் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது காதல் சர்ச்சையில் ராபர்ட் மாஸ்டருடன் ரச்சிதா சிக்கிக்கொண்டார். ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை தன் வலையில் சிக்க வைப்பதற்காக பல பிளான் போட்டும் அதை இரட்சிதா கண்டுகொள்ளவில்லை. இப்படி இருக்கையில் என்னை பொருத்தவரை எனக்கு நீங்கள் செய்தது தப்பாக தெரியவில்லை, யாருக்கும் யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம், இனிமே எப்பவும் நீங்கள் என்னுடைய நண்பர் தான் என்று கூறி காதல் கிசுகிசுப்பு ரச்சிதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.