கைவரிசையை பாருங்க மக்களே..! கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் திருட்டு… பிச்சைக்காரன் வேடமிட்ட திருடனின் வைரல் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

கைவரிசையை பாருங்க மக்களே..! கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் திருட்டு… பிச்சைக்காரன் வேடமிட்ட திருடனின் வைரல் சிசிடிவி காட்சி..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள கோவஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் விற்பனைக் கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்தக் கடைக்கு யாசகம் கேட்பவரைப் போல ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். கடையில் ஊழியர்கள் அனைவரும் பணியில் இருந்தபோதே, யாசகம் கேட்பது போல நடித்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி உள்ளார்.

கடையில் இருந்தவர்களின் கவனக் குறைவைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அங்கிருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை யாருக்கும் சந்தேகம் வராதபடி நைசாகத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு கடையில் இருந்த ஊழியர்கள் போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

ஸ்மார்ட்போன் காணாமல் போனதைத் தொடர்ந்து, கடையின் ஊழியர்கள் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பிச்சைக்காரன் வேடமிட்டு வந்த நபர் போனைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இது குறித்து திலக்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in