LATEST NEWS
விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?.. பலரும் பார்க்காத புகைப்படம்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவரின் மகன் என்று அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் துருவ் விக்ரம். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை தமிழில் ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்தனர்.
இந்த திரைப்படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்திலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் துருவ் விக்ரம் இளம் வயதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.