LATEST NEWS
அய்யோ கொடுமையே…! குழந்தைகள் சண்டையால் சீரழிந்த குடும்பம்..! பெண்ணை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துத் துவைத்த கொடூரம்..!!
ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பூனம் என்ற பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தனது அத்தை மற்றும் நாத்தனாரால் முடியைப் பிடித்து இழுத்து வரப்பட்டு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த நாள், அவர்களுக்கு இடையே சமரசம் பேசுவதற்காக பூனமின் அத்தை பிரீதி அங்கு வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த கல்வீச்சுத் தாக்குதலில் பிரீதி பலத்த காயமடைந்தார். இதனால் குடும்பத் தகராறு மேலும் தீவிரமடைந்தது.
இந்தத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்த இரு பெண்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
