LATEST NEWS
“அடக்கடவுளே.. சின்னக் குழந்தைகள் சண்டைக்கு இப்படியா…?” பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்திரபிரதேசம் ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் குடும்பத்திற்குள் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் பூனம் என்ற பெண்ணை அவரது அத்தை மற்றும் நாத்தனார் ஆகிய இருவரும் முடியைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மறுநாள் சமரசம் பேசுவதற்காகப் பூனமின் மற்றொரு அத்தையான பிரீதி அங்கு வந்துள்ளார்.
https://dainik.bhaskar.com/JUjSxyQid5b
ஆனால், அப்போது இருதரப்பிற்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் எதிர்பாராதவிதமாகக் கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் சமரசம் பேச வந்த பிரீதி பலத்த காயமடைந்தார். தாக்குதலில் படுகாயமடைந்த இரு பெண்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்பான கொடூர வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
