அதிகாலையிலே பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வாலிபர்.. காப்பாற்றச் சென்ற நபருக்கும் நேர்ந்த கொடூர கதி.. மர்மகும்பலின் வெறி செயல்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிகாலையிலே பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வாலிபர்.. காப்பாற்றச் சென்ற நபருக்கும் நேர்ந்த கொடூர கதி.. மர்மகும்பலின் வெறி செயல்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியான ஹாஃபிஸ் பாபா நகரில், அதிகாலை வேளையில் சையத் உமர் என்ற நபர் மர்மக் கும்பலால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, உமரைக் காப்பாற்ற முயன்ற சையத் என்ற மற்றொரு நபர் மீதும் அந்த ரவுடிக் கும்பல் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரக் கொலைச் சம்பவத்திற்கு அமன் குரேஷி மற்றும் அலி பாய் ஆகிய இருவர் மீதே தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் மக்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கஞ்சன்பாக் காவல்துறையினர் மற்றும் தடயவியல் ஆதாரங்களைச் சேகரிக்கும் ‘க்ளூஸ் டீம்’ அதிகாரிகள், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் கஞ்சன்பாக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in