CINEMA
“G.O.A.T” படம் குறித்து நடிகர் அஜித் சொன்ன அந்த வார்த்தை…. வெங்கட் பிரபு சொன்ன தகவல்…!!!
நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், G.O.A.T படம் ‘மங்காத்தா’ படத்தைப் போல 100 மடங்கு இருக்க வேண்டும் என அஜித் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களாக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என தன்னிடம் கூறிய அஜித், இப்படம் தொடங்கியதுமே வாழ்த்து தெரிவித்ததாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.