CINEMA
மனைவியை பிரிவதாக அறிவித்தார் நடிகர் ஜெயம் ரவி…. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அறிவித்துள்ளார். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பின் மனைவி ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Grateful for your love and understanding.
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024