CINEMA
மனைவி பிறந்தநாளில் நடிகர் மாதவன் போட்ட பதிவு…. என்ன தெரியுமா…??

பிரபல நடிகரான மாதவன் மணி ரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைyடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஆயுத எழுத்து, இறுதி சுற்று உள்ளிட்ட பல்வேறு படங்கள் மாதவனுக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது . இந்த நிலையில் இன்று இவருடைய மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், உனக்கு தெரியும், என் அன்பை என்னால் ஒருபோதும் போதுமானதாகப் பெற முடியாது. ஒவ்வொரு ஆண்டும் உன் பிறந்தநாளில் இதைச் செய்ய முடிந்ததற்கு நன்றி. நான் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறந்த மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று நீ என்னை உணரவைக்கிராய் என்று பதிவிட்டுள்ளார்.