LATEST NEWS
காதல் திருமணத்தை முடிக்கும் நடிகர் பிரபாஸ்?…. திடீர் அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அந்தத் திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி கெமிஸ்ட்ரி நன்றாக செட்டாகி இருந்தது. அதனால் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பல தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஸ் திரைப்படத்தில் ராமனாக நடித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே ஆதிபுருஸ் திரைப்படத்தின் ப்ரோமோவில் கலந்து கொண்ட கிரித்தி சனோன், கரண் ஜோஹரிடம், பிரபாஸுடன் டேட்டிங் செய்வதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரித்தி சனோன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இது முற்றிலும் வதந்தியென குறிப்பிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.