LATEST NEWS
ஆள் அடையாளம் தெரியாமல் செம ஸ்மார்ட்டா மாறிய நடிகர் பிரபுதேவா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரின் நடிப்பில் சமீபத்தில் தேள், மை டியர் பூதம் மற்றும் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. இருந்தாலும் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்து அளவிற்கே வெற்றி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பாஹிரா திரைப்படம் இந்த வருடம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தின் மூலம் பிரபுதேவா கம் பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபு தேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபுதேவா செம ஸ்மார்ட் ஆக உள்ளார்.