CINEMA
அட்ராசக்க குட் நியூஸ்…! அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் பிரஷாந்த்…!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இந்த படத்தை பிரசாந்தின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கி தயாரித்தார். இந்த படமானது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி ஹிட் கொடுத்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக வெளியாகியிருக்கிறது.
பள்ளி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரஷாந்த், எதிர்காலத்தில் ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர், குறிப்பிட்ட இயக்குநர்கள் மட்டுமின்றி, அனைத்து இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.