CINEMA
ஆண்டுகள் பல கடந்தாலும்…. அந்த கசப்பான சம்பவத்தை மறக்காத சிம்ரன்…. “அந்தகன்” பட பேட்டியில் உருக்கம்…!!
தமிழ் சினிமாவில் பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அந்த படத்தின் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மோனல். அதன்பிறகு விஜய்யோடு பத்ரி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட்டானதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. அதனை தொடர்ந்து சமுத்திரம் , சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2002 ஆம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்பொழுது அவருக்கு வெறும் 21 வயது தான் ஆனது. தற்கொலை செய்து கொள்ளும் அன்று கூட தன்னுடைய படத்தின் பூஜையில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு நடன இயக்குனர் ஒருவர்தான் காரணம் என்று அப்போது மோனலின் அக்கா சிம்ரன் குற்றச்சாட்டு வைத்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த விகாரம் அப்படியே கடந்து போனது.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாகும் அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த பேட்டியில் பேசிய சிம்ரன் நீண்ட வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தங்கையின் இறப்பு குறித்து நினைவு கூர்ந்து வேதனையை தெரிவித்துள்ளார்.