CINEMA
“அண்ணே வரார் வழிவிடு” அனல் தெறிக்கும் விஜய்யின் அரசியல் வசனம்…!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் G.O.A.T திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் வரும்போது யுவன் சங்கர் ராஜாவின் BGM செம மிரட்டலாக இருக்கிறது. மேலும் விஜய்யின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும், கதையை பிரதிபலிக்கும் வகையிலும் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த டிரெய்லரில் “DO YOU THINK YOU CAN STOP ME?, NO ONE CAN STOP ME” என்ற விஜய்யின் வசனம், அரசியல் பஞ்சாக தற்போது வைரலாகி வருகிறது. அதேபோல, “அண்ணே வரார் வழிவிடு”போன்ற பல டயலாக், அவரது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. ரா உளவாளியாக தந்தை விஜய்யும், அவருக்கு உதவி செய்யும் மகன் (AI) விஜய்யும் தோன்றும் காட்சியில் விசில் பறக்கப்போகிறது.