LATEST NEWS
திடீரென திருப்பதிக்கு விசிட் அடித்த நடிகர் ரஜினி…. கூடவே யார் போனாங்க தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதனிடையே அண்மையில் ரஜினியின் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ரஜினி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.