LATEST NEWS
“உயிருக்கு ஆபத்தான நிலை”…. நடிகை குஷ்பு போட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்…. என்ன நடந்தது….????
தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு.
பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த நான்கு நாட்களாக இருந்து வருகிறார், இன்று அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
