CINEMA
சீயான் விக்ரம் தீப்பிடிக்குது சார்…. ‘தங்கலான்’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சமுத்திரக்கனி..!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் மிரட்டலாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் அருமையாக இருந்தது. படம் உலக அளவில் 50 கோடி வசூலை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தங்கலான் பட குழுவினரை நடிகர் சமுத்திரகனி பாராட்டி பதிவிட்டுள்ளார் .அதில் தங்கலான் அசுர உழைப்பு தம்பி பா. ரஞ்சித்…. சீயான் விக்ரம் தீப்பிடிக்குது சார்… படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.