10 சவரன் நகை திருட்டு வழக்கில் நடிகர் சந்தானத்தை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்… காட்டு பூச்சியால் நடந்த விபரீதம்.. சுவாரசிய சம்பவம்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

10 சவரன் நகை திருட்டு வழக்கில் நடிகர் சந்தானத்தை தேடி வீட்டுக்கு வந்த போலீஸ்… காட்டு பூச்சியால் நடந்த விபரீதம்.. சுவாரசிய சம்பவம்..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவில் முதலில் சில நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சந்தானம் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். அதன்படி சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருப்பார். அந்த திரைப்படத்தில் சந்தானம் காட்டுப்பூச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய பேச்சு முதல் நடை உடை மற்றும் பாவனை என உண்மையாகவே அனைத்தும் திருடனை பிரதிபலிப்பது போல இருக்கும்.

Advertisement

இந்த காட்டுப்பூச்சி கதாபாத்திரம் குறித்து நடிகர் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உண்மையாகவே அவருடைய ஏரியாவில் காட்டுப்பூச்சி என்று ஒருத்தன் இருந்ததாகவும் அவனை நேரில் சந்தித்து நடத்தைகள் அனைத்தையும் கவனித்த பிறகு தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாகவும் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த உண்மையான காட்டுப்பூச்சி ஒரு நாள் போலீசில் சிக்கிய போது தன்னை நண்பன் என்று கூறி சிக்க வைக்க நினைத்ததை கூறி சில விஷயங்களை பகிர்ந்த சந்தானம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகிய வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in