VIDEOS
“கண்கொள்ளா காட்சி”.. யூத் காமன்வெல்த் அணி வகுப்பில் தேசியக் கொடியுடன் மாதவன் மகன்… வைரலாகும் வீடியோ..!!

இந்திய திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மாதவன். இவர் பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவரின் மகன் வேதாந்த் சிறந்த விளையாட்டு வீரராக உருவெடுத்துள்ளார். நீச்சல் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் சிறு வயது முதல் சிறந்த நீச்சல் வீரராக மாறுவதற்கு தீவிர பயிற்சி எடுத்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார். இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இளைஞர்கள் காமன்வெல்த் போட்டிகள் டிரினிடாட் மற்றும் டோபோகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது.
பல நாடுகள் பங்கேற்று உள்ள இந்த தொடரில் இந்தியாவில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் தொடக்க விழாவில் வீரர்கள் வீராங்கனைகளுக்கான அணிவகுப்பு நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணிக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அணிவகுப்பில் இந்தியாவின் தேசிய கொடியை நடிகர் மாதவனின் மகனும் விளையாட்டு வீரருமான வேதாந்த் ஏந்தி வந்தார்.
பொதுவாகவே சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான தொடரில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி பிரதிநிதியாக உலா வருவது என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். தன்னுடைய மகனுக்கு கிடைத்த இந்த பெருமையால் மாதவன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அது தொடர்பான வீடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க