LATEST NEWS
நயன்தாரா குழந்தைகள் என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க… எனக்கும் அவங்களுக்கும் அப்படி ஒரு உறவு… நடிகர் சந்தானம் ஓபன் டாக்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவில் முதலில் சில நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சந்தானம் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.
அதன்படி சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சந்தானம் கலந்து கொண்ட போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நயன்தாரா குறித்து இவர் பேசினார். அதாவது நயன்தாராவை வல்லவன் திரைப்படத்திலிருந்து தனக்கு நன்றாக தெரியும்.
பின்னர் நிறைய திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். அவங்க என்னை அண்ணா என்று கூப்பிட நான் அவரை தங்கச்சி என்று கூப்பிடுவேன். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் அவங்க வீட்டுக்கு போனப்போ விருந்து வச்சாங்க. குழந்தைகள் கிட்ட மாமா வந்திருக்காரு என்று சொன்னாங்க.
அப்போது காதுகுத்து ஃபங்ஷன் வைத்தால் என் மடியில வச்சுதான் காது குத்துவியாய் என்று நயன்தாராவிடம் நான் கேட்டேன். அப்படி நடந்தால் தாய்மாமன் சீர் செய்வேன் எனவும் கூறினேன். திரும்பவும் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர்ந்து நடிப்போம் என்று சந்தானம் கூறியுள்ளார்.