CINEMA
சும்மா கூட வீட்ல இருக்கலாம்….. ஆனா வாழ்க்கையில் இதை மட்டும் வாங்கக்கூடாது – நடிகர் சசிகுமார்…!!!

குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். டுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சசிகுமார், வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்கிவிடவே கூடாது. சும்மா கூட வீட்டில் உட்கார்ந்து இருக்கலாம். இந்த பாடத்தை கத்துக்க நான் நிறைய விஷயங்களை இழக்க வேண்டியதாக இருந்தது என்று கூறியுள்ளார்.