LATEST NEWS
கீழடி அருங்காட்சியகத்திற்கு குடும்பத்துடன் வந்த நடிகர் சூர்யா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் பதினெட்டு புள்ளி 43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகின்றது.
அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த மாத ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் தினந்தோறும் பார்வையாளர்கள்,பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என தினம் தோறும் வருகை புரிந்து வருகிறார்கள்.
உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்டுள்ளது. அதில் ஆறு கட்டிடங்களில் இரண்டு தளங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூர்யா தனது குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.
தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார்,குடும்ப உறுப்பினர்கள் சிலர் என அனைவரும் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று காலை பார்வையிட்டனர்.
மேலும் நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வந்திருந்தார்.
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் நடிகர் சூர்யாவிற்கு காண்பித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
