VIDEOS
அடடே இந்த மனசு யாருக்கு வரும்… வீட்டுக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபர்.. விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சியான செயல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்நிலையில் விஜய் ஆண்டனி குறித்து சமீபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஒரு நபர் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் விஜய் ஆண்டனி வீட்டுக்கு ஒரு நாள் உணவு டெலிவரி செய்ய சென்றபோது வெளியே நின்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென பின்னால் இருந்து காரில் விஜய் ஆண்டனி இறங்கி வந்து தன்னிடம் ஏன் இவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்க நான் உணவு டெலிவரி செய்ய வந்தேன் என்று கூறினேன்.
உடனே அவரது மனைவியிடம் கால் செய்து உடனே வெளியில் வர சொல்லி பணத்தை கொடுத்தார். பிறகு வீட்டிற்குள் சென்ற அவர் மீண்டும் வெளியே வந்து தண்ணீர் வேண்டுமா என்று என்னிடம் கேட்டுச் சென்றார் என நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://youtu.be/qD1e60R-mJI