LATEST NEWS
நடு வழியில நிப்பாட்டி காருக்குள்ள டிரஸ் மாத்த சொன்னாங்க… ரொம்ப கஷ்டப்பட்டேன்.. நடிகை காயத்ரி ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர். இவர் முதல் முதலில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் காயத்ரி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சூட்டிங் ஸ்பாட்டில் நான் மட்டும்தான் பெண் , பாத்ரூம் கூட இருக்காது என்றும் அதைக் கூட யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு அப்படியே கண்டுக்காமல் விட்டு விடுவது தர்ம சங்கடத்தை உண்டாக்கும். நானும் அது போன்ற கஷ்டமான சூழலில் சிக்கித் தவித்துள்ளேன்.
ஒரு படத்தின் சூட்டிங் போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு லொகேஷனுக்கு சென்று கொண்டிருக்கும் போது நடுவிலேயே ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இங்கே ஒரு மாண்டேஜ் எடுத்துக்கலாம் நீங்க கொஞ்சம் கார்லயே டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துருங்க என கூல் ஆக சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அட்லீஸ்ட் டிரஸ் மாத்த நடிகைகளுக்கு ஒரு ரூம் ஆவது அரேஞ்ச் பண்ணனும் என்று அவர் கூறியுள்ளார்.