LATEST NEWS
அட நம்ம ஜெனிலியாவா இது?… 34 வயசுலயும் இப்படி ஜொலிக்கிறாங்களே.. லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன.
அதனால் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஜெனிலியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு 34 வயது ஆனாலும் இளமை குறையாமல் இன்றும் 18 வயது போல் இளமையாகவே இருக்கிறார். தற்போது க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.