LATEST NEWS
சினிமாவில் இருந்து விலக இவர் தான் முக்கிய காரணம்?…. உண்மையை போட்டுடைத்த நடிகை ஜெனிலியா….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அதனால் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
சினிமாவில் பிஸியாக வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகியது குறித்து ஜெனிலியா சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், இன்று நான் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு காரணமே என்னுடைய கணவர் தான். நீ மிகவும் நன்றாக நடிக்கிறாய், அப்படி இருக்கும்போது ஏன் நீ வீட்டில் இருக்க வேண்டும் என என்னை உற்சாகப்படுத்திய அவர் இயக்கிய வேத் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் எனது கணவர் என்றும் அவர் என்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என என்னை வற்புறுத்தியதாக மக்கள் மத்தியில் பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் அது உண்மை அல்ல என்றும் தனது விளக்கத்தை ஜெனிலியா கூறியுள்ளார்.
