சினிமாவின் முக்கிய பிரபலத்தை திருமணம் முடிக்கும் கீர்த்தி சுரேஷ்?.. அவரே சொன்ன பதில்.. ரசிகர்கள் ஷாக்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவின் முக்கிய பிரபலத்தை திருமணம் முடிக்கும் கீர்த்தி சுரேஷ்?.. அவரே சொன்ன பதில்.. ரசிகர்கள் ஷாக்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் , அண்ணாத்த ,  சாணி காகிதம் திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த வதந்திகள் அடிக்கடி இணையத்தில் பரவி வருகின்றன.

Advertisement

இருந்தாலும் அதற்கெல்லாம் கீர்த்தி சுரேஷ் பெறும் வதந்தி என கூறிய பிறகு தான் அது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி மற்றொரு காதல் வதந்தி பரவியுள்ளது. அதாவது பிசியான இசையமைப்பாளராக திகழும் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகிய இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

தற்போது மீண்டும் இவர்கள் இருவரையும் வைத்து காதல் வதந்தி பரவி இருப்பதால் ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று தற்போது மீடியாக்களில் பேச்சு அடிப்படை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இதற்கு விளக்கம் அளித்துள்ள நிலையில் திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது எனவும் அனிருத் தனக்கு நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். அதேசமயம் தனக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in